பாமாயில், பருப்பு கொள்முதல் டெண்டருக்கு தடை… அரசு மேல்முறையீடு!

 

பாமாயில், பருப்பு கொள்முதல் டெண்டருக்கு தடை… அரசு மேல்முறையீடு!

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கான டெண்டரில் விதிமீறல் ஏற்பட்டிருப்பதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள கொள்முதல் டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என கரூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். டெண்டர் அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.

பாமாயில், பருப்பு கொள்முதல் டெண்டருக்கு தடை… அரசு மேல்முறையீடு!

இந்த மனு நேற்று நீதிபதி வேலுமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த இக்கட்டான சூழலில் மக்களின் தேவைக்காக அவசர கால டெண்டர் விடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதி, மணிகண்டன் தொடர்ந்த மனுவுக்கு விரிவான பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டதோடு பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டர் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிலையில் பருப்பு, பாமாயில் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளை விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டுமென மனுவில் கோரியுள்ளது.