#BREAKING: விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை!

 

#BREAKING: விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை!

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஆபரேஷன் செய்யப்பட்டு எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் விவேக்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

#BREAKING: விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை!

விவேக்கின் உடலுக்கு நூற்றுக் கணக்கான பொதுமக்கள் வரிசையில் காத்துக் கிடந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதே போல, தமிழ் திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் கூட அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ள நிலையில், காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தமிழக அரசு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அனுமதி கோரப்பட்டது.

#BREAKING: விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை!

இந்த நிலையில், நடிகர் விவேக்கின் உடலை காவல்துறை மரியாதையுடன் அரசு தகனம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதனால், தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு விருதுகளை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் அவரது கலை, சமூக சேவையை கெளரவிக்கும் விதமாகவும் காவல்துறை மரியாதை அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.