அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

 

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

அப்துல் கலாம் விருதுக்கு வரும் ஜூலை 15ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமை நினைவு கூறும் வகையில் தமிழக அரசு, ஆண்டுதோறும் ‘அப்துல் கலாம் விருது’ வழங்கி வருகிறது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து வழங்குவோருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த விருதை வழங்கி வருகிறது. ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படுகிறது.

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு!

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் என்ற www.awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த விருதை பெறுவோருக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கமும் 8 கிராம் தங்கப் பதக்கமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.