“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” திமுக அரசுக்கு ஆளுநர் பாராட்டு!

 

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்”  திமுக அரசுக்கு ஆளுநர் பாராட்டு!

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டியுள்ளார்.

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியத. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர் வணக்கம் என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கினார். தமிழ் இனிமையான மொழி என புகழாரம் சூட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமக்கு வாக்களித்தவர், வாக்களிக்காதோர் என பாரபட்சமின்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்படும்.சமூக நீதி தத்துவத்தின் அடிப்படையில் இந்த அரசு இயங்கும்; மாநில சுயாட்சி என்ற இலக்கை எட்ட, கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு சம குடியுரிமை, அரசியல் உரிமைகளை உறுதி செய்திட இலங்கை அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும். நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும்; மாநிலத்தின் நிதிநிலை குறித்த முழுமையான விவரம் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரியவரும்.விவசாயிகள் நலனை பாதுகாக்க, வேளாண் உற்பத்தியை பெருக்க, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என்றார்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்”  திமுக அரசுக்கு ஆளுநர் பாராட்டு!

தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும். 100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது; தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும். அதை இந்த அரசு உறுதி செய்யும்.பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் ” என்று கூறினார்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்”  திமுக அரசுக்கு ஆளுநர் பாராட்டு!

தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை வகுக்க நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்படும்.சென்னை மாநகர கட்டமைப்பை உயர்த்த ‘சிங்கார சென்னை 2.0’ திட்டம் கொண்டுவரப்படும். சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியில் புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.அரசு பணியில் ஆதி திராவிடர் பழங்குடியினருக்கான காலியிடங்கள் சிறப்பு நியமனம் மூலம் நிரப்பப்படும்.தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடப்பாண்டு பெரிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும். கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.