ரவுடி வீசிய வெடிகுண்டில் சிக்கி உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி

ரவுடி வீசிய வெடிகுண்டில் சிக்கி உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, 2 கொலை வழக்குகளில் தொடர்புடைய துரைமுத்து என்ற ரவுடி சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, தலைமை காவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது காவலர்களுக்கும் ரவுடிக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றதால், நாட்டு வெடிகுண்டை ரவுடி வீசினார். இரண்டாவது முறையாக வெடிகுண்டு வீசப்பட்ட போது, அது காவலர் சுப்பிரமணியனின் தலையில் விழுந்து வெடித்தது. இதில் படுகாயம் அடைந்த காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அம்மாவட்ட எஸ்.பி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ரவுடி வீசிய வெடிகுண்டில் சிக்கி உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி

இந்நிலையில் தூத்துக்குடியில் ரவுடியை கைது செய்யும் முயற்சியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், தகுதியின் அடிப்பட்டையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.