மதுரை சலூன் கடைக்காரர் மகளின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர்

 

மதுரை சலூன் கடைக்காரர் மகளின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர்

மதுரை மேலடை பகுதியில் வசித்து வரும் மோகன் என்னும் முடிதிருத்தும் தொழில் செய்து வருபவர் தனது மகளின் கல்வி செலவுக்கு சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை ஏழைகளுக்கு உதவினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மோகனுக்கு தனது பாராட்டுகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதே போல தன்னலம் கருதாமல் பணத்தை கொடுத்த நேத்ராவுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

மதுரை சலூன் கடைக்காரர் மகளின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர்

அதனையடுத்து இவர் பா.ஜ.கவில் இணைந்து விட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த தகவல் உண்மையில்லை என்று மோகன் தெரிவித்து விட்டார். தனது கல்வி செலவுக்காக வைத்திருந்த பணத்தை கொடுத்த, மோகனின் மகளான நேத்ராவுக்கு ஐ,நா சபை சார்பில் ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவரை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா சபை அறிவித்தது. இந்த நிலையில், தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் அவரது மேல் படிப்புக்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.