தமிழகத்திற்கு வரும் விமான பயணிகள் இ பாஸ் பெறுவது கட்டாயம் – தமிழக அரசு

 

தமிழகத்திற்கு வரும் விமான பயணிகள் இ பாஸ் பெறுவது கட்டாயம் – தமிழக அரசு

நாளை முதல் விமான போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் அதற்கான நடைமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்நாட்டு விமான பயண சேவை வரும் 25 ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக பயணிகள், விமான நிலைய அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதனுடன் கூடுதல் வழிகாட்டுதல்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது

தமிழகத்திற்கு வரும் விமான பயணிகள் இ பாஸ் பெறுவது கட்டாயம் – தமிழக அரசு
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு அரசாணையில்,

  • பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் தங்களின் விவரங்களை TN e pass இணையத்தில் பதிவு செய்வது கட்டாயம்
  • காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா ? தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறீர்களா ? கடைசி இரண்டு மாதத்தில் கொரனா பரிசோதனை மேற்கொள்ளாதவரா ? உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
  • ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இருப்பின் அவர்களையும் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும், வீட்டு முகவரி, தொடர்பு எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்
  • கொரோனா அறிகுறி இல்லையென்றால் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்
  • தவறான தகவல் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 25 விமானங்களை மட்டுமே இயக்கப்பட வேண்டும்
  • தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளவும்
  • விமானப் பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதிக்கப்படும்” குறிப்பிடப்பட்டுள்ளது.