தமிழகத்தில் துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்க அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்க அரசாணை வெளியீடு!

கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி சட்டசபை விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டுள்ளார். அப்போது, துப்புரவுத் தொழிலாளர்கள் இனி “தூய்மைப் பணியாளர்கள்” என்று அழைக்கப்படுவர் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் அறிவித்தார். துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். மக்கள் நலன், பொது சுகாதாரத்தை பேணும் வகையில் பணியாற்றிடும் துப்புரவு பணியாளர்களின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்க அரசாணை வெளியீடு!

இந்நிலையில் தமிழகத்தில் துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என்று அழைப்பதற்கான அரசாணை இன்று வெளியிடபட்டது. நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிப் பணி விதிகளில் வரைவு திருத்த அறிக்கை அனுப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.