மாணவர்களின் கவனத்துக்கு! 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கல்வி கற்க புதிய இணையதளம் அறிமுகம்

 

மாணவர்களின் கவனத்துக்கு! 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கல்வி கற்க புதிய இணையதளம் அறிமுகம்

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பெற்றோர்கள், கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வரும்வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என போர்க்கொடி தூக்கினர். பள்ளிகள் எப்போது திறக்கம் என தெரியாததால் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் கவனத்துக்கு! 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கல்வி கற்க புதிய இணையதளம் அறிமுகம்

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. அதனை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை வீடியோ மூலம் கற்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்கள் (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணைய முகவரி: e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வீடியோ மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.