அதிகம் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு செக்

 

அதிகம் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு செக்

அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களில் அதிக விடுப்பு எடுப்பவர்களின் விவரங்களை அனுப்புமாறு, அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதிகம் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு செக்

கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், மருத்துவம் மற்றும் கொரோனா விடுப்பு தவிர அதிகமாக விடுப்பு எடுப்போரின் விவரங்களை ஒப்படைக்குமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.

கல்லூரி நிர்வாகப் பணிகளை முதல்வர் அறிவுறுத்தியும் செயல்படாமல் இருப்போரின் விவரங்களையும் அனுப்புமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. அதிகமாக விடுப்பு எடுப்போர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க இந்த விவரங்கள் சேகரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.