பகல் கொள்ளையடிக்கும் மின்சார வாரியம்… நடிகர் முதல் பாமர மக்கள் வரை புலம்பல்

கொரோனா ஊரடங்கால் மக்கள் முடங்கிக் கிடந்ததை பயன்படுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களிடம் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டது என்று பலரும் சமூக ஊடகங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கிய நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், மார்ச் மாதம் மின்சாரம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்று கணக்கெடுக்க முடியவில்லை. ஜனவரி மாதக் கணக்கு அடிப்படையில் ஏப்ரல் மாதம் கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியது. அப்போது இதில் மோசடி திட்டம் உள்ளது. யூனிட் பயன்பாடு ஸ்லாப்பில் ஒரு யூனிட் உயர்ந்தால் கூட அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்குமே, தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

மின் கட்டணத்தை அளவீடு செய்யும்போது பார்த்துக்கொள்வோம் என்று மழுப்பியது தமிழக அரசு. தற்போது கொரோனா தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. மின் பயன்பாடு கணக்கீடும் தொடங்கியுள்ளது. வழக்கமாக கோடைக்காலங்களில் மின் பயன்பாடு அதிகமாகவே இருக்கும். இதை சாதகமாக பயன்படுத்தி புரியாத கணக்கீட்டை வழங்கி இரண்டு, மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

http://


பாலமுருகன் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக அரசின் அடுத்த கொள்ளை ஆரம்பம். #கொரோனா தொற்றுவினால், வீடுகளில் மீன் மீட்டரின் அளவுகளை கடந்த 4 மாதமாக கணக்கு செய்யாமல், நேற்று மொத்தமாக கணக்கீடு செய்ததால், சரசாரியாக 2,000+ கட்டி வந்த நான், இந்த மாதம் 6,660 கட்டவேண்டும். 3 மடங்கு அதிகமாக கட்டவேண்டும்.

தமிழக அரசின் புதிய அளவீட்டு கொள்கைபடி 500 யுனிட்க்கு மேல் ஆகும் ஒவ்வொரு 100 யுனிட்கும் விலை கூடிக் கொண்டே போகும். 4மாதமாக கணக்கெடுக்காததால் 1660யுனிட் என வந்துள்ளது. கடந்தமுறை கணக்கீடு இல்லாமலேயே பணம் 860 கட்டியுள்ளேன்.இருந்தும் 6,660 என்றால் எப்படி? பகல்கொள்ளைஎன்பது இதுதானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

http://

மின்சார கட்டணத்தை வசூலிப்பவர்கள் அதற்கான கணக்கையாவது சொல்லுங்கள் என்று பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இந்த மோடி பற்றிய பதிவுகள் இன்று ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.
“கொரோனா பாதிப்பை பயன்படுத்தி தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையடிக்கிறது என்று கருதுபவர்கள் எத்தனை பேர்? ” என்று நடிகர் பிரசன்னா கூட தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular

‘அமேசான் பிரைம்,நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட எல்லா OTT தளங்களும் ஒரே இடத்தில்” ஜியோ டிவி பிளஸ் அறிமுகம்!

வர்த்தகத்துறைகளில் முன்னணி நிறுவனமாக திகழும் நிறுவனங்களுள் ஒன்று ஜியோ. இந்த நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் இந்த முறை கொரோனா பாதிப்பால் மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில் பேசிய...

“உஷார் !வாட்ஸ் அப்பில் வலம் வரும் அழகிகள்”- ஆசையாக பேசி ஆட்டைய போட்டு ..நிர்வாண வீடியோ மூலம் நிர்மூலமாக்குவார்கள்..

பெங்களூருவில் விட்ஃபீல்டில் வசிக்கும்26 வயது சைமன் ஒரு தனியார் நிறுவன பொறியாளர் .இவர் ஒரு வீட்டில் தனியாக வசித்துள்ளார் .கடந்த மாதம் ஒரு பெண் இவரிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு ,தான்...

கொரோனா நிதி விவரங்களை தெரிவிப்பதில் என்ன சிரமம்? நீதிமன்றம் கேள்வி

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நிதியுதவி அளிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோடியும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க பலரும் நிதியுதவி அளித்தனர். குறிப்பாக சமூக செயற்பாட்டாளர்கள்,...

திருச்செந்தூர் அருகே 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு! அதிர்ச்சி தகவல்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது கல்வலை கிராமம். இந்தக் கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள காட்டுப் பகுதியில் 7 வயதுள்ள ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத சிலர்...
Open

ttn

Close