5 மணிக்கு மேல் ஆகியும்… இவ்வளவு தான் வாக்குப்பதிவா?

 

5 மணிக்கு மேல் ஆகியும்… இவ்வளவு தான் வாக்குப்பதிவா?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கியது. காலையில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவின் நிலவரத்தை 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டிருந்தது. காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீதமும் 11 மணி நிலவரப்படி 26.29 சதவீதமும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.61 சதவீதமும் மாலை 3 மணி நிலவரப்படி 53.35 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது.

5 மணிக்கு மேல் ஆகியும்… இவ்வளவு தான் வாக்குப்பதிவா?

இந்த நிலையில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி 234 தொகுதிகளிலும் சேர்த்து 63.65% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக நாமக்கல்லில் 70.79% திருப்பூரில் 62.15% கள்ளக்குறிச்சி 69.60% வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 50.05% வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 மணிக்கு மேல் ஆகியும்… இவ்வளவு தான் வாக்குப்பதிவா?

இதையடுத்து வாக்குப்பதிவு எப்போது வரை நடைபெறும் என்ற கேள்விக்கு பதிலளித்த சத்ய பிரதா, பொதுமக்கள் 7 மணி வரையில் வாக்களிக்கலாம் என்றும் பொதுமக்கள் வாக்களித்த பிறகு கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் என்றும் கூறியுள்ளார். வாக்குப்பதிவு தொடங்கி 10 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் 63.65% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

5 மணிக்கு மேல் ஆகியும்… இவ்வளவு தான் வாக்குப்பதிவா?