தேர்தல் முன்னேற்பாடு: தேர்தல் அதிகாரி ஆலோசனை!

 

தேர்தல் முன்னேற்பாடு: தேர்தல் அதிகாரி ஆலோசனை!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதை எதிர்நோக்கி கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் நடத்தி வரும் நிலையில், தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. முதற்கட்டமாக கடந்த நவ.16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம், டிசம்பர் மாதம் வரையில் அதில் திருத்தங்கள் மேற்கொண்டது. அந்த பணி நிறைவடைந்திருக்கும் நிலையில், நாளை வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

தேர்தல் முன்னேற்பாடு: தேர்தல் அதிகாரி ஆலோசனை!

இதனிடையே தேர்தலுக்கான இயந்திரங்கள் வரவழைப்பு, கூடுதல் வாக்குச்சாவடிகள் தயார் செய்வது போன்ற பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வந்தது. அண்மையில் தமிழகம் வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழு, தேர்தலை முன்கூட்டியே நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. இது தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு வித்திட்ட நிலையில், தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார். காணொலி காட்சி மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.