“யாரும் யாருக்கும் அடிமை இல்லை” : ஓபிஎஸ் ட்வீட்!

 

“யாரும் யாருக்கும் அடிமை இல்லை” : ஓபிஎஸ் ட்வீட்!

கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தான் கொண்டாடி வருகிறது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

“யாரும் யாருக்கும் அடிமை இல்லை” : ஓபிஎஸ் ட்வீட்!

கொத்தடிமை என்பது பணத்திற்காக ஒரு குடும்பமோ அல்லது ஊரோ தலைமுறை தலைமுறையாக வசதி படைத்த நபரிடம் அடிமைப்பட்டு கிடப்பதேயாகும். கடந்த 2005 ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகில் சுமார் 8.1 மில்லியன் மக்கள் கொத்தடிமைகளாக இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஐக்கிய நாடுகள் நடத்திய கொத்தடிமை ஒழிப்பு மாநாட்டுக்கு பிறகு, கொத்தடிமை முறையை ஒழிப்பதற்காக இந்தியாவில் 1976இல் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதில் மீட்கப்படுவோர்க்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வேளாண் நிலம் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.

“யாரும் யாருக்கும் அடிமை இல்லை” : ஓபிஎஸ் ட்வீட்!

இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் ட்விட்டர் பக்கத்தில், “கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் “கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை(Feb-9) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன்.

“யாரும் யாருக்கும் அடிமை இல்லை” என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.