சென்னையில் ஒரு லட்சத்து 877 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,879 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

covid 19

சென்னையில் ஒரு லட்சத்து 877 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 5,059 பேருக்கும் திண்டுக்கல்லில் 2,893 பேருக்கும் திருநெல்வேலியில் 5,393 பேருக்கும், ஈரோட்டில் 732, திருச்சியில் 4,282 பேருக்கும், நாமக்கல் 728 மற்றும் ராணிப்பேட்டை 5,300, செங்கல்பட்டு 14,866, மதுரை 11,175, கரூர் 532, தேனி 5,355 மற்றும் திருவள்ளூரில் 14,128 பேருக்கு, தூத்துக்குடியில் 7,350, விழுப்புரத்தில் 3,923 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 1,042 பேருக்கும், திருவண்ணாமலையில் 6,304, தருமபுரியில் 770 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பூரில் 909, கடலூர் 3,271, மற்றும் சேலத்தில் 3,670, திருவாரூரில் 1,738, நாகப்பட்டினம் 772, திருப்பத்தூர் 1,167, கன்னியாகுமரியில் 4,891 மற்றும் காஞ்சிபுரத்தில் 9,384 பேருக்கும், சிவகங்கை 2,426 மற்றும் வேலூரில் 6,069 பேருக்கும், நீலகிரியில் 802 பேருக்கும், தென்காசி 2,210, கள்ளக்குறிச்சியில் 3,807 பேருக்கும், தஞ்சையில் 2,915, விருதுநகரில் 8,151, ராமநாதபுரத்தில் 3,293 பேருக்கும், அரியலூர் 950 மற்றும் பெரம்பலூரில் 497 பேருக்கும், புதுக்கோட்டையில் 2,258 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,849பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Most Popular

சட்டப்பிரிவு 370 ரத்து.. காஷ்மீர் வளர்ச்சிக்காக பல தசாப்தங்களாக இருந்த இருளை மோடி நீக்கினார்.. பியூஸ் கோயல்

ஜம்மு அண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்டு நேற்றோடு ஒராண்டு முடிவடைந்து விட்டது. அதனை முன்னிட்டு நேற்று, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் டிவிட்டரில், சமானிய மக்களுக்கு...

பாபர் மசூதி இடிப்பு, பால் தாக்கரே படத்துடன் சாமனா பத்திரிகையில் விளம்பரம்.. சர்ச்சையை கிளப்பிய சிவ சேனா..

பல இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, நேற்று நிஜமானது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைகளோடு நேற்று தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்காததால் சிவ...

பாபர் மசூதி இருந்தது, உள்ளது மற்றும் இருக்கும்…. பரபரப்பை ஏற்படுத்திய அசாதுதீன் ஓவைசியின் டிவிட்

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று சிறப்பாக நடந்தது. அதேசமயம் அந்த விழா நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில்...

ஜூன் காலாண்டில் ரூ.32 கோடி லாபம் ஈட்டிய மும்பை பங்குச் சந்தை..

நாட்டின் முன்னணி பங்குச் சந்தைகளில் ஒன்றான மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் மும்பை பங்குச் சந்தையின் நிகர லாபம்...