தமிழகத்தில் இன்று 5,879 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 2.51 லட்சமாக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே 76லட்சமாக அதிகரித்துள்ளது. 6 லட்சத்து 79 ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,879 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 60,580 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27,18,718 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 3,544 பேர் ஆண்கள், 2,335 பேர் பெண்கள். 121 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. இன்று மட்டும் 99 பேர் உயிரிழந்தனர். 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 77 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது. இன்று 7,010 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,90,966 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Popular

பாபர் மசூதி இருந்தது, உள்ளது மற்றும் இருக்கும்…. பரபரப்பை ஏற்படுத்திய அசாதுதீன் ஓவைசியின் டிவிட்

அயோத்தியில் நேற்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று சிறப்பாக நடந்தது. அதேசமயம் அந்த விழா நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி டிவிட்டரில்...

ஜூன் காலாண்டில் ரூ.32 கோடி லாபம் ஈட்டிய மும்பை பங்குச் சந்தை..

நாட்டின் முன்னணி பங்குச் சந்தைகளில் ஒன்றான மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) தனது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் மும்பை பங்குச் சந்தையின் நிகர லாபம்...

சித்தராமையா உடல் நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை தகவல்.. தொண்டர்கள் நிம்மதி

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தது. இதனையடுத்து அவருக்கு உடனடியாக கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் பாசிட்டிவ்வாக வந்தது....

ராமர் கோயில் பூமி பூஜை ஜனநாயகத்தின் மரணம் என்ற காமெடியன் குணால் கம்ரா.. பதிலடி கொடுத்த டிவிட்டர்வாசிகள்..

பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா. அவர் காமெடியனாக இருந்தாலும் விரும்பதகாத சர்ச்சைகளில் சிக்குவது தற்போது சகஜமாகி வருகிறது. நேற்று அயோத்தியில் நடந்த ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை...