தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 17,082 ஆக உயர்வு!!

 

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 17,082 ஆக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 55லட்சத்து 25ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 47ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 17,082 ஆக உயர்வு!!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 805 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 407 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 68ஆய்வகங்கள் உள்ளன. இன்று மட்டும் 11, 835பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,21,480ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதிக அளவில் பரிசோதனை செய்கிறோம்.தமிழகத்தில் 3 மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. 88% பேர் அறிகுறி இல்லாதவர்கள். 12 % பேருக்கு மட்டுமே கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளன. இறப்பும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 40% பேருக்கு காய்ச்சல், 37% பேருக்கு இருமல் மற்றும் 10% பேருக்கு தொண்டை வலி ஏற்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.” என தெரிவித்தார்.