தமிழகத்தில் மேலும் 1,438பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 28,694 ஆக உயர்வு

 

தமிழகத்தில் மேலும் 1,438பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 28,694 ஆக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 67லட்சத்து 06ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 93ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் 27,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் மேலும் 1,438பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 28,694 ஆக உயர்வு

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட1438பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1116 ஆகும். 861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 74 பரிசோதனை மையங்களில் இன்று ஒரே நாளில் 15,692 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,60,673ஆக உயர்ந்துள்ளது. 4500 என ஐசிஎம்ஆர் நிர்ணயித்த தனியார் பரிசோதனை மையங்களுக்கான கட்டணத்தை நாம் 3000 என குறைத்திருக்கிறோம். இறப்பைக் குறைக்கிறோம், பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஒருசிலர் கூறுவது சரியல்ல. ஆதாரம் இல்லாமல் பேரிடர் காலத்தில் ஒரு கருத்தைக் கூறக்கூடாது. ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சொல்லுங்கள். களத்தில் இருந்து பணியாற்றுவோர் மனம் புண்படும்படியான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம். தடுப்பூசிக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. இதற்கான அனுமதியை பெற்றிருக்கிறோம்” எனக் கூறினார்.