கைக்கொடுத்த ஊரடங்கு! தமிழகத்தில் குறைந்தது கொரோனா

 

கைக்கொடுத்த ஊரடங்கு! தமிழகத்தில் குறைந்தது கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 6லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

கைக்கொடுத்த ஊரடங்கு! தமிழகத்தில் குறைந்தது கொரோனா

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 34,867 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18லட்சத்து 77ஆயிரத்து 211ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 3,01,580 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 267பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 19,421பேர் ஆண்கள், 15,446பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 4,985பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கைக்கொடுத்த ஊரடங்கு! தமிழகத்தில் குறைந்தது கொரோனா

இன்று 404பேர் உயிரிழந்துள்ளார். 177பேர் தனியார் மருத்துவமனையிலும், 227பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,872ஆக அதிகரித்துள்ளது. இன்று 27,026பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,54,759ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.