தமிழகத்தில் இன்று புதிதாக 827 பேருக்கு கொரோனா! 20,000ஐ நெருங்கியது!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 58லட்சத்து 14ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 57ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் 18 ஆயிரத்து 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை விஜயபாஸ்கர், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 827பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 559 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 643 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 10,548 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆகஅதிகரித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 70ஆய்வகங்கள் உள்ளன. ” என தெரிவித்தார்.

Most Popular

அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை, தரமான உணவு- நடிகர் விவேக்

அரசு மருத்துவமனை சிகிச்சை சிறந்த முறையில் உள்ளது என பாராட்டி நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். நம் நாட்டில் கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலுள்ளது. இங்கு...

திருச்சி மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,328பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. சாதாரண மக்கள் முதல் அரசியல்...

கேரளாவில் இன்று ஒரே நாளில் 449பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 8,322 ஆக உயர்வு!!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில்...

‘கூகுள் இந்தியாவில் பெருமளவு முதலீடு’ பிரதமர் மோடி – சுந்தர் பிச்சை உரையாடல்

உலகளவில் மிகப் பெரிய இணைய நிறுவனமான கூகுள் இந்தியாவில் பெரிய அளவு தொகை முதலீடு செய்யவிருக்கிறது எனும் செய்திகள் வந்துவரும் நிலையில் பார்த பிரதமர் நரேந்திர மோடியும் கூகுள் நிறுவனத்தில் தலைமைச் செயல்...
Open

ttn

Close