தமிழகத்தில் 2,000க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

 

தமிழகத்தில் 2,000க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.11 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.14 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

தமிழகத்தில் 2,000க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,971 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,139 பேர் ஆண்கள், 832பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 37 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 27ஆயிரத்து 282ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 276 பரிசோதனை மையங்கள் உள்ளன. 21 மாவட்டங்களில் புதிதாக கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 6 பேர் இணை நோய்கள் எதுவும் இல்லாமல் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் 2,000க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இன்று 28பேர் உயிரிழந்துள்ளார். 20பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 8பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,558பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 76 ஆயிரத்து 339ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.