துணை முதல்வர் பதவிக்கு நாங்க ஆசைபடவில்லை! காங்கிரஸ் விளக்கம்

 

துணை முதல்வர் பதவிக்கு நாங்க ஆசைபடவில்லை! காங்கிரஸ் விளக்கம்

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதவி தர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வந்த தகவலை அக்கட்சி மறுத்துள்ளது.

சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், காங்கிரசுக்கு துணை முதலமைச்சர் பதவி தர வேண்டும் என நேற்று நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநில தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

துணை முதல்வர் பதவிக்கு நாங்க ஆசைபடவில்லை! காங்கிரஸ் விளக்கம்

இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10/09/2020 அன்று சென்னை மேறமாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ்க்கு துணை முதலமச்சர் பதவி தர வேண்டும் என்று எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. சில தொலைக்காட்சி ஊடகங்களில் வந்துள்ளா செய்தி முற்றிலும் தவறானது” என