“கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது” : தமிழகம் முழுவதும் நேரில் ஆய்வு செய்யவுள்ள முதல்வர்!

 

“கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது” : தமிழகம் முழுவதும் நேரில் ஆய்வு செய்யவுள்ள முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழகத்தில் நான்கிற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

“கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது” : தமிழகம் முழுவதும் நேரில் ஆய்வு செய்யவுள்ள முதல்வர்!

நேற்று ஒரு நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 3,650 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது . மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்தனர். இதில் 16 பேர் தனியார் மருத்துவமனைகளில், 29 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையிலும் இதன் பரவலை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று, அரசால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் எந்தளவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்தும் கொரோனா தொற்று எந்தளவு தடுக்கப்பட்டுள்ளது எனவும் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.” என்று பதிவிட்டுள்ளார்.