• October
    16
    Wednesday

Main Area

Main



பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

edappadipalanisamy
edappadipalanisamy

சென்னை: பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. இந்த விருதுக்கு தகுதியானவர்களின் பெயர்களை குடியரசுத் தலைவருக்கு பிரதமர் பரிந்துரைப்பார். ஓராண்டில் அதிகபட்சமாக 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்படும். 

அதன்படி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மறைந்த சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகிய மூன்று பேருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தலைசிறந்த அரசியல் மேதையான பிரணாப் முகர்ஜி நம் நாட்டுக்காக தன்னலமின்றி சேவையாற்றியதாக தான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.