தமிழகத்தில் முழு ஊரடங்கா?… தலைமை செயலாளர் திடீர் ஆலோசனை!

 

தமிழகத்தில் முழு ஊரடங்கா?… தலைமை செயலாளர் திடீர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, நெல்லை, திருப்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. கொரோனா நோயை கட்டுக்குள் கொண்டு வர இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுவதும் அமல்படுத்தப்படும் பாதிப்பு குறையவில்லை.

தமிழகத்தில் முழு ஊரடங்கா?… தலைமை செயலாளர் திடீர் ஆலோசனை!

நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. சென்னையில் மட்டுமே 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவானது. இவ்வாறு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து இன்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். அக்கூட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் முழு ஊரடங்கா?… தலைமை செயலாளர் திடீர் ஆலோசனை!

முன்னதாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்த ராஜீவ் ரஞ்சன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விளக்கினார். இந்த சந்திப்புக்கு பிறகே ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.