சட்டமன்ற தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் – சத்யபிரதா சாகு

 

சட்டமன்ற தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் – சத்யபிரதா சாகு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பரப்புரை பணிகளில் திமுக – அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்துவதற்கு ரூ.621 கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளையும் தமிழக தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்துவருகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் – சத்யபிரதா சாகு

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்காக 92,300 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 26 மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதற்கட்ட சோதனைகள் முடிவடைந்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் பிப்.3ம் தேதி முதல்கட்ட சோதனைகள் நிறைவடையும். மத்திய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்படும்” எனக் கூறினார்.