மாலை 2ஆம் அமைச்சரவைக் கூட்டம்… அதிமுகவின் முறைகேடுகளை தோண்டியெடுக்க முதல்வர் முடிவு!

மாலை 2ஆம் அமைச்சரவைக் கூட்டம்… அதிமுகவின் முறைகேடுகளை தோண்டியெடுக்க முதல்வர் முடிவு!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாளாக நடைபெற்ற கூட்டம் இன்றோடு முடிவடைகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு பதிலுரை வழங்கினார். இச்சூழலில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 2ஆம் அமைச்சரவைக் கூட்டம்… அதிமுகவின் முறைகேடுகளை தோண்டியெடுக்க முதல்வர் முடிவு!

இது புதிய அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம். இதற்கு முன்னதாக ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற சமயம் நடைபெற்றது. அப்போது இரண்டாம் அலை உச்சம் பெற்றிருந்ததால் பல முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போது இரண்டாம் அலை பரவல் வெகுவாகக் குறைந்து விரைவில் முடிவடையவிருக்கிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனால் இன்றைய இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் முக்கியவத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

மாலை 2ஆம் அமைச்சரவைக் கூட்டம்… அதிமுகவின் முறைகேடுகளை தோண்டியெடுக்க முதல்வர் முடிவு!

இந்தக் கூட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது, கொரோனா கட்டுப்பாடு மற்றும் மூன்றாம் அலை குறித்த ஆலோசனை உள்ளிட்ட கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்படுகிறது. மாநிலத்தின் நிதிநிலை குறித்தும், இந்திய தணிக்கை துறை அறிக்கையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள், இழப்புகள் குறித்தும் விவாதிக்கப்படும். அதேபோல அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் பேசப்படுகிறது.