விடிய விடிய நடந்த ஆலோசனைக் கூட்டம்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தயார்?

விடிய விடிய நடந்த ஆலோசனைக் கூட்டம்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தயார்?

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் பணிகள் தொடங்கிவிட்டன. பாமக, பாஜக ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்கும் அதிமுக, 177தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விட்டது. அதன் கூட்டணி கட்சிகள் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

விடிய விடிய நடந்த ஆலோசனைக் கூட்டம்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தயார்?

அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவில் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதில் இழுபறி நீடிக்கிறது. பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில், 14 இடங்களில் திமுக – பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதனால், திமுக வேட்பாளர்களுக்கு ஈடாக பாஜக வேட்பாளர்களை களமிறக்க பாஜக ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கிறது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் கூட்டம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் நேற்று நடந்தது. எல்.முருகனும் உடனிருந்தார்.

விடிய விடிய நடந்த ஆலோசனைக் கூட்டம்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தயார்?

இக்கூட்டம் நள்ளிரவைத் தாண்டி விடிய விடிய நடைபெற்றதாம். கூட்டத்தின் முடிவில், ஒரு வழியாக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. இன்றே வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. குஷ்பு, கவுதமி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்…