“விஜயகாந்த் தான் முதல்வர்”… மீண்டும் தேமுதிகவுக்கு அதிமுக அழைப்பு!

 

“விஜயகாந்த் தான் முதல்வர்”… மீண்டும் தேமுதிகவுக்கு அதிமுக அழைப்பு!

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்து பேச தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து தமிழக அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று வருகிறது. ஒருபுறம் கூட்டணி ,தொகுதி பங்கீடு ,பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். திமுகவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை அதன் கூட்டணிக் கட்சிகளான விசிக, மதிமுக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள. பாஜகவுடன் கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் நாளை முடிவு எட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

“விஜயகாந்த் தான் முதல்வர்”… மீண்டும் தேமுதிகவுக்கு அதிமுக அழைப்பு!

இந்த சூழலில் அதிமுக – தேமுதிக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது தேமுதிக இந்த முறையும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. ஆனால் 40 சீட்டுகள் தங்களுக்கு வேண்டும் என தேமுதிக தலைமை கேட்டுள்ள நிலையில் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் வரை மட்டுமே அளிக்க அதிமுக முன்வந்துள்ளது. விஜயகாந்த் உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருக்கும் நிலையில் அக்கட்சியின் முக்கியத்துவம் தமிழகத்தில் குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதன் பிரதிபலிப்பு மக்களவை தேர்தலிலும் தென்பட்டது.

“விஜயகாந்த் தான் முதல்வர்”… மீண்டும் தேமுதிகவுக்கு அதிமுக அழைப்பு!

இதனால் தேமுதிகவுக்கு 40 சீட்டுகள் ஒதுக்க அதிமுக மறுப்பு தெரிவித்து வருகிறது.இதனால் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம்; 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என விஜயபிரபாகரன் கூறிய நிலையில் நேற்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே .சதீஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், நமது முதல்வர் விஜயகாந்த்; நமது சின்னம் முரசு என பதிவிட்டார். இந்த பதிவிலிருந்து அதிமுக கூட்டணியில் தேமுதிக வெளியேறும் என்பது சொல்லப்பட்டது.

“விஜயகாந்த் தான் முதல்வர்”… மீண்டும் தேமுதிகவுக்கு அதிமுக அழைப்பு!

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக தேமுதிகவுக்கு, அதிமுக மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷிடம் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தொலைபேசி மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளதா? இல்லை தனித்து போட்டியா என்பது தெரியவரும்.