அதிமுக ஆட்சியின் திட்டங்கள் – இன்று வெள்ளை அறிக்கை

 

அதிமுக ஆட்சியின் திட்டங்கள் – இன்று வெள்ளை அறிக்கை

அதிமுக ஆட்சியின்போது 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

அதிமுக ஆட்சியின் திட்டங்கள் – இன்று வெள்ளை அறிக்கை

இந்நிலையில் அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை பற்றி இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை பேரவையின் தாக்கல் செய்கிறார். 110 விதியில் அறிவித்த திட்டங்கள் எத்தனை? அதன் நிதி ஒதுக்கீடு திட்டங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. 110 விதியில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதிமுக அரசு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என திமுக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக ஆட்சியின் திட்டங்கள் – இன்று வெள்ளை அறிக்கை

இதனிடையே அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு புறக்கணித்து வருவதாகவும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இந்த சூழலில் இன்று அதிமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மீதான வெள்ளை அறிக்கை வெளியாகிறது