தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

வழிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனத்தால் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நெல்லை. தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன் படி புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக திருவண்ணமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம், ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியில் 15 செ.மீ மழை பதிவாகி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.