நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திருச்சியில் தமுமுக, மமக போராட்டம்

 

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திருச்சியில்  தமுமுக,  மமக போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை கண்டித்து திருச்சி ரயில்வே நிலையத்தை முற்றுகையிட்டு, திருச்சி மாநகர் மாவட்ட த. மு. மு. க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பேரணியாக ரயில் நிலையம் வந்து மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திருச்சியில்  தமுமுக,  மமக போராட்டம்

கடந்த மூன்று வருடத்தில் தமிழகத்தில் நீட் தேர்வால் மன உளைச்சலில் 16 மாணவ, மாணவியர்கள் பலியாகி உள்ளனர்.
உயிர் பலி வாங்கும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தமிழக மாணவர்களின் உயிரோடு விளையாட கூடாது எனவும், மத்திய அரசின் உத்தரவுக்கு துணைபோகும் எடப்பாடி அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி, திருச்சி மனிதநேய மக்கள் கட்சியினர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திருச்சியில்  தமுமுக,  மமக போராட்டம்

ஆனால் ரயில்வே நிலையம் முன்பு காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தடுப்புகளை வைத்து தடுத்தனர். இதனால் சிறிது தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தடுப்புகளை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமுமுகவினர், மனிதநேய மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.