கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கிய மம்தா… 200+ இடங்களில் தொடர்ந்து முன்னிலை!

கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கிய மம்தா… 200+ இடங்களில் தொடர்ந்து முன்னிலை!

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஏப்ரல் 29ஆம் தேதி தான் மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இச்சூழலில் இன்று ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கிய மம்தா… 200+ இடங்களில் தொடர்ந்து முன்னிலை!

மேற்கு வங்க தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தேர்தலாக இருக்கிறது. கடந்த முறை 3 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக இம்முறை 100க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும் அளவிற்கு உயர்ந்திருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. திருணாமுல் ஆட்சியமைத்தாலும் 160 இடங்கள் வரை வெற்றிபெறும் என்று கூறின.

கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கிய மம்தா… 200+ இடங்களில் தொடர்ந்து முன்னிலை!

இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கருத்துக்கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி 200க்கும் மேற்பட்ட இடங்களில் மம்தாவின் திருணாமுல் கட்சி முன்னிலையில் இருக்கிறது. ஆரம்பத்தில் கடும் போட்டியாகச் சென்றுகொண்டிருந்த டிரென்ட் தற்போது ஒட்டுமொத்தமாக மம்தா பக்கம் மாறியிருக்கிறது. அதன்படி திருணாமுல் 206 இடங்களிலும் பாஜக 86 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மூன்றாவது அணியாக இருக்கும் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி 1 இடத்தில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.