ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை.. வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை.. வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் உள்பட பல்வேறு வாக்குறுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி நேற்று மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலுக்கான திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் நாங்கள் எங்களது வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். நாங்கள் ஏற்கனவே செய்த பணிகளுக்கு உலகம் பாராட்டியுள்ளது. ஐ.நா.விடமிருந்தும் விருதுகளை பெற்றுள்ளோம்.

ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை.. வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
வேலைவாய்ப்பு

100 நாள் வேலை கொடுப்பதில் நாங்கள்தான் நம்பர் ஒன். நாங்கள் வறுமை 40 சதவீதம் குறைத்துள்ளோம். விவசாயிகளின் வருவாயை 3 மடங்கு உயர்த்தியுள்ளோம். இது அரசியல் அறிக்கை அல்ல. இது வளர்ச்சி சார்ந்த அறிக்கை. இது மக்களுக்கு, மக்களுக்காக மற்றும் மக்களின் அறிக்கை. இவ்வாறு அவர் தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளில் சில:

ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்கு வேலை.. வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
நிதியுதவி

ஆண்டுக்கு 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
விவசாயிகளுக்கு வழங்கப்படும் வருடாந்திர நிதி உதவி ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்.
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரம்பில் கிரெடிட் கார்டு
ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே டெலிவரி
ஏழை மக்களுக்கு ஆண்டுதோறும் ரூ.12 ஆயிரம் வரை நிதியுதவி
குடும்பத்தின் பெண் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வரை நிதியுதவி