அவரு நக்சலைட்… மரியாதை, மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடையாது.. மிதுன் சக்கரவர்த்தியை தாக்கிய மம்தா கட்சி

அவரு நக்சலைட்… மரியாதை, மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடையாது.. மிதுன் சக்கரவர்த்தியை தாக்கிய மம்தா கட்சி

பா.ஜ.க.வில் இணைந்த பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியை, அவர் முதலில் நக்சலைட், அவருக்கு நம்பகத்தன்மை, மரியாதை மற்றும் இப்போது மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடையாது என்று திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

பாலிவுட் நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மிதுன் சக்கரவர்த்தி நேற்று கொல்கத்தாவில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். மிதுன் சக்கரவர்த்தி பா.ஜ.க.வில் இணைந்ததை திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

அவரு நக்சலைட்… மரியாதை, மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடையாது.. மிதுன் சக்கரவர்த்தியை தாக்கிய மம்தா கட்சி
பா.ஜ.க.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான சுவுகதா ராய் இது தொடர்பாக கூறியதாவது: மிதுன் சக்கரவர்த்தி இன்றைய நட்சத்திரம் அல்ல. அவர் கடந்த காலத்தின் நட்சத்திரம். அவர் நான்கு முறை கட்சி மாறியுள்ளார். அவர் உண்மையில் நக்சலைட். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

அவரு நக்சலைட்… மரியாதை, மக்கள் மத்தியில் செல்வாக்கு கிடையாது.. மிதுன் சக்கரவர்த்தியை தாக்கிய மம்தா கட்சி
சுவுகதா ராய்

அமலாக்கத்துறையால் வழக்குகளுடன் மிதுன் சக்கரவர்த்தியை பா.ஜ.க. மிரட்டியது. இதனையடுத்து அவர் மாநிலங்களவையிலிருந்து (எம்.பி. பதவி ராஜினாமா) விலகினார். தற்போது அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். அவருக்கு நம்பகத்தன்மை, மரியாதை மற்றும் இப்போது மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.