மேற்கு வங்க அரசியலின் யதார்த்தத்தை அமிஷ் ஷா புரிந்து கொள்ளவில்லை… திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்க அரசியலின் யதார்த்தத்தை அமிஷ் ஷா புரிந்து கொள்ளவில்லை… திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்க அரசியலின் யதார்த்தத்தை அமித் ஷா புரிந்து கொள்ளவில்லை. மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார் என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகிய செல்வாக்கு மிக்க தலைவரான சுவேந்து ஆதிகாரி அனைவரும் எதிர்பார்த்தது மாதிரி நேற்று அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த சூழ்நிலையில், மேற்கு வங்க அரசியலின் யதார்த்தத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புரிந்து கொள்ளவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க அரசியலின் யதார்த்தத்தை அமிஷ் ஷா புரிந்து கொள்ளவில்லை… திரிணாமுல் காங்கிரஸ்
கல்யாண் பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான கல்யாண் பானர்ஜி கூறியதாவது: சூழ்நிலையில், மேற்கு வங்க அரசியலின் யதார்த்தத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புரிந்து கொள்ளவில்லை. மம்தா பானர்ஜி 3வது முறையாக ஆட்சிக்கு வருவார். மக்கள் மம்தா மீது உள்ளார்ந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மற்றவர்களின் குடும்பத்தை மையமாக கொண்ட அரசியல் பற்றி அமித் ஷா பேசுகிறார்.

மேற்கு வங்க அரசியலின் யதார்த்தத்தை அமிஷ் ஷா புரிந்து கொள்ளவில்லை… திரிணாமுல் காங்கிரஸ்
சுவேந்து ஆதிகாரி

நான் உங்களுக்கு (அமித் ஷா) நினைவூட்டுகிறேன், சுவேந்து ஆதிகாரி ஒரு செல்வாக்குமிக்க அரசியல் குடும்பத்தை சேர்ந்தவா அல்லவா? உங்கள் மகனும் யாருடைய செல்வாக்கில் பி.சி.சி.ஐ.யின் உயர் அதிகாரியானார்? இவ்வாறு அவர் தெரிவித்தார். பி.சி.சி.ஐ. எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா உள்ளதைதான் கல்யாண் பானர்ஜி சுட்டி காட்டியுள்ளார்.