குடும்பமே கட்சியே வி்ட்டு வெளியேற தயார்.. கலக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்

 

குடும்பமே கட்சியே வி்ட்டு வெளியேற தயார்.. கலக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்

பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து ஆதிகாரியின் இளைய சகோதரர் திப்யெந்து ஆதிகாரியும் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் சுவேந்து ஆதிகாரி. கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். இருப்பினும் சுவேந்து ஆதிகாரியின் தந்தை மற்றும் சகோதரர்கள் மம்தா கட்சியில் தொடர்ந்து நீடித்தனர்.

குடும்பமே கட்சியே வி்ட்டு வெளியேற தயார்.. கலக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்
சுவேந்து ஆதிகாரி

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சுவேந்து ஆதிகாரியின் தந்தையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான சிசிர் ஆதிகாரி கூறுகையில், நான் என் மகனை ஆதரிப்பேன். மார்ச் 20ம் தேதி காந்தியில் நடைபெறும் பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு என் மகன் சுவேந்து ஆதிகாரி என்னிடம் சொன்னால், நான் நிச்சயமாக அந்த கூட்டத்துக்கு செல்வேன் என தெரிவித்தார். சிசிர் ஆதிகாரியும் பா.ஜ.கவில் இணைவார் என்று பேசப்படுகிறது. தற்போது திப்யெந்து ஆதிகாரியும் பா.ஜ.க.வில் சேருவார் என கூறப்படுகிறது.

குடும்பமே கட்சியே வி்ட்டு வெளியேற தயார்.. கலக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்
சிசிர் ஆதிகாரி

திப்யெந்து ஆதிகாரி கூறுகையில், திரிணாமுல் காங்கிரசுடன் நான் இருப்பதை விளக்குவது கடினம். கடந்த 4-5 மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் நான் அனுமதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு கட்சி நிகழ்ச்சிக்கும் நான் அழைக்கப்படுவதாக திரிணாமுல் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கூறுகிறார். அது பொய். தொழில்நுட்ப அளவில் நான் திரிணாமுல் காங்கிரசில் உள்ளேன். எனது மூத்த சகோதரர் சுவேந்து பா.ஜ.க.வில் இணைந்து விட்டார். நந்திகிராமில் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடும் முடிவு முற்றிலும் உணர்ச்சிவசமானது. சரியான நபரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என நான் நம்புகிறேன். நந்திகிராமில் அனைவருக்கும் சுவேந்து மீது நம்பிக்கை உள்ளது. அமைதி-அன்பை நேசிக்கும் பகுதியில் மதவாதம் விளையாடப்படுவது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. பா.ஜ.க.வின் உயர் கட்டளையிலிருந்து கட்சியில் சேருமாறு எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.