மன விளையாட்டுகள் வேலை செய்யாது அமித் ஷா ஜி.. இது மேற்கு வங்கம்.. திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி

 

மன விளையாட்டுகள் வேலை செய்யாது அமித் ஷா ஜி.. இது மேற்கு வங்கம்.. திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி

மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 30 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 26 தொகுதிகளை பா.ஜ.க கைப்பறும் என்ற அமித் ஷாவுக்கு, மேற்கு வங்கத்தில் உங்க மன விளையாட்டுகள் வேலை செய்யாது என்று திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.

மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் முதல் கட்டமாக 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. முதல் கட்ட தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்நிலையில் டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மன விளையாட்டுகள் வேலை செய்யாது அமித் ஷா ஜி.. இது மேற்கு வங்கம்.. திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி
அமித் ஷா

அப்போது அவர் கூறுகையில், பூத் அளவிலான தொண்டர்கள் மற்றும் கட்சி தலைவர்களிடம் விவாதித்த பிறகு , மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளில் 26க்கும் அதிகமாக தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று என்னால் சொல்ல முடிகிறது. மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்தார்.

மன விளையாட்டுகள் வேலை செய்யாது அமித் ஷா ஜி.. இது மேற்கு வங்கம்.. திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி

அமித் ஷாவின் இந்த கணிப்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான டெரிக் ஓ பிரியன் பதில் கொடுத்துள்ளார். டெரிக் ஓ பிரியன் டிவிட்டரில், மன விளையாட்டுகள் வேலை செய்யாது, மோ-ஷா (மோடி, அமித் ஷா) குஜராத்தில் உங்கள் வெற்றி கணிப்பு ஸ்டண்டுகளை முயற்சிக்கவும். இது மேற்கு வங்கம் என பதிவு செய்து இருந்தார். மேலும் முதல் கட்ட தேர்தல் நடந்த அனைத்து தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.