இந்த சட்டத்தை கொண்டு வாங்க.. நான் அரசியலிருந்து விலகி விடுகிறேன்.. பா.ஜ.க.வுக்கு சவால் விடும் அபிஷேக்

இந்த சட்டத்தை கொண்டு வாங்க.. நான் அரசியலிருந்து விலகி விடுகிறேன்.. பா.ஜ.க.வுக்கு சவால் விடும் அபிஷேக்

குடும்பத்தில் ஒரு உறுப்பினரை மட்டுமே அரசியலில் அனுமதிக்கும் சட்டத்தை கொண்டு வாங்க, நான் அரசியலிருந்து விலகி விடுகிறேன் என்று மேற்கு வங்க எம்.பி. அபிஷேக் பானர்ஜி பா.ஜ.க.வுக்கு சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த சில மாதங்களில் அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசும், தற்போது அம்மாநிலத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள பா.ஜ.க.வும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் அவரது உறவினரான அபிஷேக் பானர்ஜி அந்த கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக உள்ளார்.

இந்த சட்டத்தை கொண்டு வாங்க.. நான் அரசியலிருந்து விலகி விடுகிறேன்.. பா.ஜ.க.வுக்கு சவால் விடும் அபிஷேக்
திரிணாமுல் காங்கிரஸ்

இதனை சுட்டிக்காட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குடும்ப கட்சி என்று பா.ஜ.க. குற்றம் சாட்டி வந்தது. பா.ஜ.க.வின் குற்றச்சாட்டுக்கு அபிஷேக் பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். குல்தாலியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அபிஷேக் பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: கைலாஷ் விஜயவர்கியா முதல் சுவேந்து ஆதிகாரி, முகுல் ராய் முதல் ராஜ்நாத் சிங் வரை, உங்கள் குடும்பங்களில் மற்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.வில் முக்கியமான பதவிகளை வகிக்கின்றனர்.

இந்த சட்டத்தை கொண்டு வாங்க.. நான் அரசியலிருந்து விலகி விடுகிறேன்.. பா.ஜ.க.வுக்கு சவால் விடும் அபிஷேக்
பா.ஜ.க.

ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அரசியல் ஈடுபட அனுமதி என்பதை நீங்க உறுதி செய்தால், அடுத்த நொடி எங்க குடும்பத்திலிருந்து மம்தா பானர்ஜி மட்டும் அரசியலில் இருப்பார். நான் சத்தியம் செய்கிறேன். பா.ஜ.க. தலைவர்கள் என்னை மிரட்டி பணம் பறித்தவர் என்று கூறுகின்றனர். என் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் நானே வெளிப்படையாக தூக்கில் தொங்குவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.