திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் ஐக்கியம்… மம்தாவுக்கு தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தாமரை கட்சி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் ஐக்கியம்… மம்தாவுக்கு தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தாமரை கட்சி

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அரிந்தம் பட்டாச்சார்யா பா.ஜ.க.வில். இணைந்தார். இது மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மேற்கு வங்கம் மாநிலம் நாதியா மாவட்டத்தில் சாந்திபூர் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏ அரிந்தம் பட்டாச்சார்யா. கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியி்ட்டு பட்டாச்சார்யா வெற்றி பெற்றார். ஆனால், அடுத்த ஆண்டே, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தாவி விட்டார். கடந்த 4 ஆண்டுகளாக மம்தா கட்சியில் இருந்த அரிந்தம் பட்டாச்சார்யா திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் பா.ஜ.க.வில் இணைந்து விட்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் ஐக்கியம்… மம்தாவுக்கு தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தாமரை கட்சி
மம்தா பானர்ஜி, பா.ஜ.க.

பாஜக தேசியப் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா முன்னிலையில் நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமைஅலுவலகத்தில் கைலாஷ் விஜய்வர்க்கியா முன்னிலையில் அரிந்தம் பட்டாச்சார்யா பா.ஜ.க.வில் இணைந்தார். இதுவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி., இடதுசாரி கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் ஐக்கியம்… மம்தாவுக்கு தொடர்ந்து ஷாக் கொடுக்கும் தாமரை கட்சி
பா.ஜ.க.

பா.ஜ.க.வில் இணைந்தபின் பட்டாச்சார்யா கூறுகையில், மம்தா அரசு மேற்கு வங்க இளைஞர்களுக்கு எதுவும் செய்யவில்லை. மம்தா பானர்ஜி ஆட்சியில் இளைஞர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவி்ல்லை, தொழிற்சாலைகள் வரவில்லை. தற்போது மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா திட்டம்தான் தேவை. என்னுடைய தொகுதியில்கூட என்னை பணி செய்யவிடாமல் ஆளும்கட்சியினர் தடுக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.