பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. பேமஸ்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தாக்கு

 

பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. பேமஸ்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தாக்கு

பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பிரபலம் (பேமஸ்) என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், மாநில அமைச்சர்களில் ஒருவருமான சுவேந்து அதிகாரி கடந்த வாரம் திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவர் பா.ஜ.க.வில் சேரப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் எங்கள் கட்சியில்தான் இருக்கிறார் என்றும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பொய்களை பரப்புவதில் பிரபலம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் தெரிவித்தார்.

பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. பேமஸ்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தாக்கு
சுவேந்து அதிகாரி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் இது தொடர்பாக கூறியதாவது: பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்ஸூம் பொய்களை பரப்புவதில் பிரபலமானவை. எங்களது 218 எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் மட்டுமே கட்சியிலிருந்து வெளியேறி உள்ளார். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க அனைவரும் உழைப்பார்கள். சுவேந்து அதிகாரி பா.ஜ.க.வில் வரவேற்கப்பட்டதாக திலிப் கோஷ் தெரிவித்தார். அங்குள்ள (பா.ஜ.க.வில்) அனைவரையும் சுவேந்து ஏமாற்றியுள்ளார்.

பொய்களை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. பேமஸ்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தாக்கு
சவுகதா ராய்

நாங்கள் நேற்று முன்தினம் சுவேந்து அதிகாரியை சந்தித்து பேசினோம். பா.ஜ.க.வில் சேருவார் என்ற கேள்வியை இல்லாமல் திரிணாமுல் காங்கிரசில் தொடர்ந்து இருப்பார். நான் அவருடன் தொடர்பில் இருந்தேன். அவர் திரிணாமுல் காங்கிரசில் நீடிப்பார் என்ற முழு நம்பிக்கை இருந்தது. இதுவரை ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே கட்சியிலிருந்து வெளியேறி உள்ளார். அதனால் எந்த கவலையும் இல்லை. வாழ்க்கையில் தவறான புரிதல் நடைபெறுகிறது. அதனை உரையாடல் மற்றும் விவாதத்தால் மட்டுமே அதனை நீக்க முடியும். நேற்று முன்தினம் அதுதான் நடந்தது. இன்னும் 2 நாட்களில் சுவேந்து அதிகாரியே அதனை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.