முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்தால் 4 பாகிஸ்தானை உருவாக்க முடியும்.. சர்ச்சையை கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ்

முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்தால் 4 பாகிஸ்தானை உருவாக்க முடியும்.. சர்ச்சையை கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ்

முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்தால் 4 பாகிஸ்தானை உருவாக்க முடியும் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்த கட்டமாக மொத்தம் 30 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் நேற்றோடு தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷேக் ஆலம் நேற்று பிர்பம் பகுதியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்தால் 4 பாகிஸ்தானை உருவாக்க முடியும்.. சர்ச்சையை கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ்
பாகிஸ்தான்

அந்த கூட்டத்தில் ஷேக் ஆலம் பேசுகையில், நாம் 30 சதவீதம், அவர்கள் 70 சதவீதம். 70 சதவீத ஆதரவுடன் அவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். அவர்கள் வெட்கப்பட வேண்டும். நமது முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்தால் நம்மால் 4 பாகிஸ்தானை உருவாக்க முடியும். 70 சதவீத மக்கள் எங்கு போவார்கள்? என பேசினார். ஷேக் ஆலமின் இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்தால் 4 பாகிஸ்தானை உருவாக்க முடியும்.. சர்ச்சையை கிளப்பிய திரிணாமுல் காங்கிரஸ்
முஸ்லிம்கள்

ஷேக் ஆலமின் இந்த பேச்சு, மேற்கு வங்கத்தின் அரசியல் அரங்கில் ஒரு மதவாதத்தை பயன்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேற்கு வங்கத்தில் மொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம் முஸ்லிம் மக்கள் உள்ளனர்.