பிரதமர் மோடி, அமித் ஷா பிரச்சாரம் செய்ய தடை?

 

பிரதமர் மோடி, அமித் ஷா பிரச்சாரம் செய்ய தடை?

மேற்கு வங்கத்தில் நான்கு கட்ட வாக்குப்பதிவு நடந்துமுடிந்திருக்கிறது. ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற வாக்குப்பதிவு அனைத்துமே பெரும் களேபரத்துடனே நடந்திருக்கிறது. உச்சக்கட்டமாக கூச்பெஹார் மாவட்டத்திலுள்ள ஒரு வாக்குச்சாவடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு திருணாமுல் கட்சியினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

பிரதமர் மோடி, அமித் ஷா பிரச்சாரம் செய்ய தடை?
பிரதமர் மோடி, அமித் ஷா பிரச்சாரம் செய்ய தடை?

இதற்கெல்லாம் பாஜக தலைவர்களும் திருணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இச்சூழலில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மீது அவதூறு பரப்புவதாகவும் வன்முறையைத் தூண்டும் விதமாகவும் பேசியதாக மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்தது. இதை எதிர்த்து ஒரு நாள் முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து பாஜக தலைவர் ராகுல் சின்ஹாவுக்கும் 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.

தற்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரச்சாரம் செய்ய தடைவிதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் திருணாமுல் காங்கிரஸ் தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “மோடியும் அமித் ஷாவும் தேர்தல் நடத்தை விதிமுறைகளையும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் மீறியுள்ளனர். கடந்த 12ஆம் தேதி கல்யாணி பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்துவா, நாமசூத்ரா சமூகத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். இரு சமூகத்துக்கும் மம்தா பானர்ஜி ஏதும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

All India Trinamool Congress - Wikipedia

மதரீதியான, சமூக ரீதியில் குறிப்பாக மத்துவா, நாமசூத்ரா சமூகத்தைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளது விதி மீறலாகும். ஆகவே மேற்கு வங்கத்தில் அடுத்து நடக்க இருக்கும் நான்கு கட்ட வாக்குப்பதிவிலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய அவர்கள் இருவருக்கும் தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.