எதிர்க்கட்சி அறிக்கைதான் விட முடியும்! கோப்புகளிலா கையெழுத்திட முடியுமா? -டி.கே.எஸ் இளங்கோவன்

 

எதிர்க்கட்சி அறிக்கைதான் விட முடியும்! கோப்புகளிலா கையெழுத்திட முடியுமா? -டி.கே.எஸ் இளங்கோவன்

எதிர்க்கட்சி தலைவரை அறிக்கை நாயகன் என அமைச்சர் ஜெயக்குமார் உட்பட ஆளுங்கட்சி தலைவர்கள் விமர்சித்துவந்தனர். இதற்கு திமுக எம்.பியும், அமைப்பு செயலாளருமான டி.கே.எஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ் இளங்கோவன், “ நடிகை குஷ்பு மாற்றுக் கட்சிக்கு சென்றது எந்த சூழ்நிலையில் சென்றார்கள் என்பது எனக்கு தெரியாது அதைப் பற்றி கூற விரும்பவில்லை. ஜெயக்குமார் என்ன சொன்னாலும் அது நடக்காது. யார் கூட்டணி நெல்லிக்கனி போல் சிதறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எதிர்க்கட்சி அறிக்கைதான் விட முடியும்! கோப்புகளிலா கையெழுத்திட முடியுமா? -டி.கே.எஸ் இளங்கோவன்

அரசாங்கம் செய்யும் குற்றங்களை சுட்டிக்காட்டி அறிக்கை விடுவதுதான் எதிர்க்கட்சியின் வேலை.. நாங்கள் உட்கார்ந்து கோப்பில் கையெழுத்து போட்டு திட்டங்களை மாற்ற முடியாது. நாங்கள் ஆட்சியில் இருந்தால் செயல்படுவோம். எதிர்கட்சியில் இருந்தால் அரசின் மீது உள்ள தவறுகளை அறிக்கையின் மூலம் சுட்டிக் காட்டுவோம். எந்தக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் பேசிய நாங்கள் முடிவு செய்து கொள்வோம். சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதி கட்டாயமாக மக்களுக்கானதாக அமையும். தேர்தல் காலங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை 100% நிறைவேற்றிய கட்சி திமுக… தமிழகம் மிகப் பின்தங்கிய மாநிலமாக கடந்த 10 ஆண்டுகளில் ஆகியுள்ளது. அதனை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வதற்கான பணிகள் தேர்தல்அறிக்கையில் இருக்கும்” எனக் கூறினார்.