தியாகி சுப்பிரமணிய சிவா 137-வது பிறந்த நாள்- அரசு சார்பில் மரியாதை!

தியாகி சுப்பிரமணிய சிவா 137-வது  பிறந்த நாள்- அரசு சார்பில் மரியாதை!

விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா 137-வது பிறந்த நாளை ஒட்டி உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மரியாதை செலுத்தினார்.

தியாகி சுப்பிரமணிய சிவா 137-வது  பிறந்த நாள்- அரசு சார்பில் மரியாதை!

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்ரமணிய சிவா, தீவிரமாக ஈடுபட்டு வந்த காலத்தில் சிறிது காலம், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் தங்கி இருந்தார்.
அவரது ஆதரவாளர்களில் ஒருவரான சின்னமுத்து என்பவர் அடைக்கலம் கொடுத்தார். அங்கு அனைத்துத் தரப்பினரும் வழிபடும் வகையில் பாரத மாதா கோயில் ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டார்.

தியாகி சுப்பிரமணிய சிவா 137-வது  பிறந்த நாள்- அரசு சார்பில் மரியாதை!

சுதந்திர போராட்டப் பணி மற்றும் பாரதமாதா கோவில் அமைக்கும் பணி என இரண்டிலும் தீவிரமாக இயங்கி வந்த நிலையில் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இறந்தார். அவர் பாரத மாதா கோயில் அமைக்க, ஏற்பாடு செய்திருந்த இடத்திலேயே சுப்பிரமணிய சிவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு தமிழக அரசு சார்பில் சுப்ரமணிய சிவாவுக்கு மணிமண்டபம் அமைத்துள்ளது. அவரது கனவை நிறைவேற்றும் வகையில், பாரத மாதா ஆலயம் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
இந்த நிலையில், இன்று அவரது 137-வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தியாகி சுப்பிரமணிய சிவா 137-வது  பிறந்த நாள்- அரசு சார்பில் மரியாதை!

மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சுப்ரமணிய சிவாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.