3 மாதத்தில் ரூ.357 கோடி லாபம் ஈட்டிய பிரபல வாட்ச் நிறுவனமான டைட்டன்

3 மாதத்தில் ரூ.357 கோடி லாபம் ஈட்டிய பிரபல வாட்ச் நிறுவனமான டைட்டன்

ஜூவெல்லரி, வாட்ச் முதல் கண் கண்ணாடி வரையிலான வர்த்தகததில் ஈடுபட்டு வரும் பிரபலமான நிறுவனமான டைட்டன் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் டைட்டன் நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.357 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும். 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனம் தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.294.6 கோடி ஈட்டியிருந்தது.

3 மாதத்தில் ரூ.357 கோடி லாபம் ஈட்டிய பிரபல வாட்ச் நிறுவனமான டைட்டன்

2020 மார்ச் காலாண்டில் டைட்டன் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.4,428.75 கோடியாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 5.2 சதவீதம் சரிவாகும். கோவிட்-19 தொற்று பரவலால் கடந்த மார்ச் மாதத்தின் இரண்டாவது பாதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக என டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3 மாதத்தில் ரூ.357 கோடி லாபம் ஈட்டிய பிரபல வாட்ச் நிறுவனமான டைட்டன்

அந்த காலாண்டில் டைட்டன் நிறுவனத்தின் மொத்த செலவுகள் குறைந்ததன் காரணமாக அதன் செயல்திறன் வலுவாக இருந்தது. அதேசமயம் அதிக வரி செலவினம் (சென்ற ஆண்டைக் காட்டிலும் 58 சதவீதம் அதிகமாகும்) அந்நிறுவனத்தின் நிகர வருவாய் வளர்ச்சியை குறைத்தது.