ஜூவல்லரி வியாபாரம் அமோகம்… டைட்டன் கம்பெனி லாபம் ரூ.419 கோடி…

ஜூவல்லரி வியாபாரம் அமோகம்… டைட்டன் கம்பெனி லாபம் ரூ.419 கோடி…

டைட்டன் கம்பெனி 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.419 கோடி ஈட்டிள்ளது.

ஜூவல்லரி, கடிகாரங்கள் மற்றும் கண் அணிகலன்கள் தயாரிப்பு நிறுவனமான டைட்டன் கம்பெனி தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டைட்டன் கம்பெனி 2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் லாபமாக ரூ.419 கோடி ஈட்டிள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 10.9 சதவீதம் குறைவாகும்.

ஜூவல்லரி வியாபாரம் அமோகம்… டைட்டன் கம்பெனி லாபம் ரூ.419 கோடி…
டைட்டன்

2020 டிசம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் டைட்டன் கம்பெனியின் வருவாய் ரூ.7,287 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 17.4 சதவீதம் அதிகமாகும். பண்டிகை காலத்தில் ஜூவெல்லரி பிரிவில் வர்த்தகம் சிறப்பாக இருந்ததால் வருவாய் சிறப்பாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூவல்லரி வியாபாரம் அமோகம்… டைட்டன் கம்பெனி லாபம் ரூ.419 கோடி…
டைட்டன் வாட்ச்

2020 டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, டைட்டன் கம்பெனியின் சில்லரை தொடர் (காரட்லேன் உள்பட) கடைகளின் எண்ணிக்கை 1,854ஆக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று டைட்டன் கம்பெனி நிறுவன பங்கின் விலை 2.50 சதவீதம் குறைந்து ரூ.1,524.15 ஆக குறைந்தது.