• February
    23
    Sunday

Main Area

Main



திருவண்ணாமலை மகா தீபம்... 'ஓம் நமசிவாய' கோஷத்துடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

அருணாச்சலேஸ்வரர்
அருணாச்சலேஸ்வரர்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

ttn

திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறார். இத்திருத்தலத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.   கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

ttn

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில், கோயில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஒரு தீபத்திலிருந்து ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டு, பின்பு அந்த தீபத்திலிருந்து  ஒரே தீபமாகப் பரணி தீபம் ஏற்றப்பட்டது. 

சிகர நிகழ்ச்சியாக இன்று (டிசம்பர் 10) மாலை 6 மணியளவில் கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. அப்போது ஆண்டுக்கு ஒருமுறை சில நொடிகள் மட்டுமே காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர், கோயில் கொடிமரம் முன்பு இன்று எழுந்தருளி  அருள்பாலிப்பார். அதேபோல் பஞ்சமூர்த்திகளும் இன்று பக்தர்களுக்குக் காட்சி  தருவார்கள். 

ttn

இந்த மகாதீபத்தை காண  சுமார் 25  லட்சம் பேர்  திருவண்ணாமலையை  நோக்கி படையெடுத்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகாதீபம் ஏற்றப்படும்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை உச்சிக்குச் சென்று தீபத்தை வணங்குவார்கள். அதன்படி இந்த ஆண்டும் ஆயிரக்கணக்காகப் பக்தர்கள்  மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.