தொடர்மழையால் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

 

தொடர்மழையால் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்மழையால் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் மழையாலும், ஆந்திராவின் கண்டலேறு மற்றும் அம்மம்பள்ளி அணைகளில் இருந்தும் திறக்கப்பட்ட தண்ணீர் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வந்து சேர்ந்ததால், ஏரியில் நீர்இருப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்து வரும் மழையின் காரணமாக, பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 884 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், பூண்டி ஏரியில் நீர்இருப்பு ஆயிரத்து 529 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து வினாடிக்கு 824 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தொடர்மழையால் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

இதேபோல் சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 128 மில்லியன் கனஅடியாக உள்ளது, ஏரிக்கு வினாடிக்கு 116 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டுள்ளது. மற்றொரு முக்கிய ஏரியான புழல் ஏரியில் நீர் இருப்பு 2 ஆயிரத்து 94 மில்லியன் கனஅடியாக உள்ளது. பூண்டியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மழைநீர் காரணமாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 971 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டுள்ளது. இதனையடுத்து சென்னை குடிநீர் தேவைக்காக, ஏரியில் இருந்து வினாடிக்கு 115 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தொடர்மழையால் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 182 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 460 கனஅடி வீதம் தண்ணீர் வரும் நிலையில், 60 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையின் காரணமாக முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், சென்னை நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.