திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சா.மு. நாசருக்கு கொரோனா!

 

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சா.மு. நாசருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,175 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,73, 460 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சா.மு. நாசருக்கு கொரோனா!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 5ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சா.மு. நாசருக்கு கொரோனா!

இந்நிலையில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சா.மு. நாசருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் மாவட்ட செயலாளர் நாசர் வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.